முக்கிய செய்திகள்:
மிஸோரமில் வாக்கு எண்ணிக்கை - ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னிலை

மிஸோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தலைநகர் ஐஸ்வாலில் நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

மிஸோரம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணி தலைநகர் ஐஸ்வாலில் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், மிஸோரம் ஜனநாயக கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் காங்கிரஸ் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், ஜெய்மஹாபர்ஹத் கட்சி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. மிஸோரம் ஜனநாயகக் கூட்டணியில், மிஸோரம் ஜனநாயக கட்சி 31 இடங்களிலும், மிஸோரம் மக்கள் அமைப்பு 8 இடங்களிலும், மாராலாந்து ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் களம் கண்டுள்ளது. ஜோரம் தேசிய கட்சி 38 இடங்களிலும், பாரதிய ஜனதா 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும், ஜெய் மஹாபர்ஹத் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட்டுள்ளன. தற்போது முதலமைச்சராக உள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியின் லால் தனவ்லா முன்னிலையில் உள்ளார்.

மேலும் செய்திகள்