முக்கிய செய்திகள்:
அமெரிக்காவுடன் இந்திய ராணுவத் தலைமை தளபதி பேச்சு வார்த்தை - இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு, ராணுவ பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசனை

இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவுகள் குறித்து, அந்நாட்டு ராணுவ தலைமை அதிகாரியுடன், ராணுவ தலைமைத் தளபதி திரு. பிக்ரம் சிங் ஆலோசனை நடத்தினார்.

இந்திய ராணுவ தலைமை தளபதி திரு. பிக்ரம் சிங், 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் சென்ற அவர், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்தார். மேலும், ராணுவ அதிகாரிகளின் தலைவரான ராய் ஒடியர்நோவுடன், பிக்ராம் சிங் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு, ராணுவ பரிமாற்றம் மற்றும் கூட்டு ராணுவ பயிற்சி உள்ளிட்டவை குறித்து கலந்தலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்