முக்கிய செய்திகள்:
குளிர்காலத்தைப் பயன்படுத்தி காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அடர்பனியிலும் துல்லியமாக படம்பிடிக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர். அடர்பனி இருந்தாலும், துல்லியமாக படம்பிடித்துக் காட்டும் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் குளிர்காலம் தொடங்கியுள்ளதைஅடுத்து, இன்னும் சில நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் எல்லைப் பகுதியில் ஊடுருவும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள எல்லைப்பாதுகாப்புப் படையினர் முள்வேலி அமைப்பதோடு ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி திரு.வீரேந்திர சிங், இந்த கண்காணிப்பு கேமராக்கள், அதிக பலன் தரும் என தெரிவித்தார். எல்லைப் பகுதிக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர ஆயுதங்களுடன் 4 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையும் திரு.வீரேந்திர சிங் மறுத்தார்.

மேலும் செய்திகள்