முக்கிய செய்திகள்:
பெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் – குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல்

பெங்களூரு ஏ.டி.எம். மையத்தில், பெண் வங்கி அதிகாரியை அரிவாளால் கொடூரமாக தாக்கிய குற்றவாளியை தும்கூரில் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு என்.ஆர். சர்க்கிளில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில், கடந்த 19-ம் தேதி பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய் என்ற வங்கி பெண் அதிகாரியை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினான். படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகப் போலீசாருக்கு பெரும் சவாலாக விளங்கிய அந்த குற்றவாளியைப் பிடிக்க, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர், ஆந்திர மாநிலம் அனந்த்பூரைச் சேர்ந்த நாராயணரெட்டி என்பது தெரியவந்தது. இதனிடையே, கர்நாடக மாநிலம் தும்கூரில் நாராயண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்