முக்கிய செய்திகள்:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுப் புகாரில் சிக்கிய பிர்லா நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் - ஆளும் காங்கிரஸ் பிரமுகர்கள் நன்கொடை பெற்றது அம்பலம் - சி.பி.ஐ. விசாரணைக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு புகாரில் சிக்கிய பிர்லா நிறுவனத்தில், அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம், ஆளும் மத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு, லட்சக்கணக்கில் நன்கொடை கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில், பெருமளவு நடைபெற்ற முறைகேடு காரணமாக, நாட்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மற்றுமொரு மகா ஊழலான இந்த புகார் தொடர்பாக, சி.பி.ஐ. பதிவு செய்த முதல் விசாரணை அறிக்கையில், பிர்லா குழுமத்தின் குமார் மங்கலத்தின் பெயரும் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கிடைத்த டைரியில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை அளித்திருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, டைரியில் கிடைத்த விவரங்கள் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதில் தனியார் நிறுவனங்கள் பெருமளவு ஈடுபட்டு வருவதாகவும், அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் செய்திகள்