முக்கிய செய்திகள்:
தொடங்கியது குளிர்கால கூட்டத்தொடர் - இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டவுடன் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், முரளி லால் உள்ளிட்ட 9 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து, நாளை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்ட பின்னர், அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவைக்கான குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும், முரளி லால் உள்ளிட்ட 9 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டன. இதையடுத்து, நாளை வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் திருமதி. மீராகுமார் அறிவித்தார். இதேபோன்று, மாநிலங்களவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாளை மீண்டும் அவை கூடும்போது, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா, விலைவாசி உயர்வு, தனித் தெலங்கானா மாநில விவகாரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்த​சி.ஏ.ஜி. அறிக்கை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

மேலும் செய்திகள்