முக்கிய செய்திகள்:
பெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் - அடையாளம் தெரிந்த குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிரம்

பெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் பெண் வங்கி அதிகாரியை, அரிவாளால் கொடூரமாக தாக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளான். அவனைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு என்.ஆர். சர்க்கிளில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில், கடந்த 19-ம் தேதி பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய் என்ற வங்கி பெண் அதிகாரியை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினான். படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியைப் பிடிக்க போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரம் தெரியவந்தது. அவன் ஆந்திர மாநிலம் அனந்த்பூரைச் சேர்ந்த நாராயணரெட்டி என்பதும், பல்வேறு குற்றச்செயல்களில் அவனுக்குத் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளஅவனை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்