முக்கிய செய்திகள்:
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் - இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார் ஜாகீர்கான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியினர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 5, 8 மற்றும் 11-ம் தேதிகளில் ஒருநாள் போட்டியும், 18, 26 ஆகிய தேதிகளில் டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜாகீர்கான் மீண்டும் இடம்பிடித்துள்ளார். கவுதம் காம்பீர், ஓராண்டுக்குப் பிறகு அணியில் மீண்டும் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவில்லை.

கேப்டன் தோனி தலைமையில் விளையாடவுள்ள டெஸ்ட் போட்டி அணியில், முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ரஹானே, அஷ்வின், புவனேஸ்வர் குமார், உமேஷ்யாதவ், முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜாகீர்கான், ராய்டு, ரித்திமான் சாஹா, இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில், தோனி, ஷிகார் தவான், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ரஹானே, யுவராஜ் சிங், அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது சமி, ஜாகீர் கான், ராய்டு, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்