முக்கிய செய்திகள்:
வெஸ்ட் இண்டீஸ் அணி அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணி அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, கொச்சியில் நடைபெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், திணறிய அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ் கெய்ல் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். சார்ல்ஸ் 42 ரன்களுடனும், சாமுவேல்ஸ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பிராவோ 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, ரெய்னா தலா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா 72 ரன்களும், விராட் கோலி 86 ரன்களும் குவித்தனர். இதனைத் தொடர்ந்து, 35.2 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 212 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்