முக்கிய செய்திகள்:
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் : நாளை தொடங்குகிறது

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக கொச்சி சென்ற இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து, இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொச்சியில் நாளை, பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும், நேற்று கொச்சி நகருக்கு விமானம் மூலம் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வாயிலில், கேரள பாரம்பரிய முறைப்படி அளிக்கப்பட்ட இந்த வரவேற்பின்போது, கதகளி கலைஞர்கள் கலந்து கொண்டு, கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, முதலாவது ஒருநாள் போட்டிக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் விதமாக, இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும், இன்று தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் செய்திகள்