முக்கிய செய்திகள்:
ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் தொடர்புடைய 39 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சொத்து விவரங்கள் உள்ளிட்ட புதிய தகவல்கள் வெளியீடு

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் தொடர்பாக, ஸ்ரீசாந்த் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 39 பேர் மீது டெல்லி போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு போலீசார், சூதாட்டம் தொடர்பான குற்றப்பத்திரிகையை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், 125 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தற்போது தாக்கல் செய்துள்ளனர். அதில், தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமான சூதாட்ட தரகர் டின்கு மன்டி ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் மூலம் பல கோடி ரூபாய் ஆதாயம் பெற்றுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். ஐ.பி.எல் விளையாட்டின்போது வீரர்களுக்கு பணம் கொடுத்தது மட்டுமின்றி, விலைமாதர்களையும் தரகர்கள் அனுப்பிவைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சூதாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா உட்பட குற்றம்சாட்டப்பட்ட 39 பேரின் சொத்து விவரங்கள், ஹவாலா பணப்பரிமாற்றம், சதித்திட்டம் சம்பந்தமான தகவல்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர். பல்வேறு ஹோட்டல்கள், ஸ்டேடியம், கிளப் உள்ளிட்ட இடங்களில் சூதாட்ட தரகர்களை அவர்கள் சந்தித்தது தொடர்பான விவரங்களும் தெரியவந்துள்ளது. இதனால், ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்