முக்கிய செய்திகள்:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மேற்கிந்தியதீவுகள் அணி எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 126 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 24 ஆண்டுகால கிரிக்கெட் சகாப்தத்தை இன்று நிறைவு செய்த நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், உணர்ச்சிப் பெருக்குடன் பிரியா விடைபெற்றார். தனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளின் போது, உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மும்பை வாங்டே மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களை எடுத்திருந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆட்டக்காரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க எண்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 126 ரன்கள் மற்றும் ஒரு இன்னிஸ் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் Gayle 35 ரன்களுடனும், சந்தரபால் 43 ரன்களும், ராம்தின் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் ஓஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ரோஹித் சர்மா தொடர் நாயகனாகவும், ஓஜா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்