முக்கிய செய்திகள்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - ஒரு இன்னிங்ஸ், 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து விளையாடத் தொடங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மா, அஷ்வின் ஆகியோரின் அபார ஆட்டத்தால், முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 177 ரன்களும், அஷ்வின் 124 ரன்களும் எடுத்தனர். 219 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. கிறிஸ் கெய்ல் 33 ரன்களிலும், Powell 36 ரன்களிலும், பிராவோ 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பவே, அந்த அணி 168 ​ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், ஒரு இன்னிங்ஸ் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய முஹம்மது சமி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் செய்திகள்