முக்கிய செய்திகள்:
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி நிதி வழங்கப்பட்டது.
சென்னை : தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் ஆண்டுதோறும், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பிரபல சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டியினை கடந்த 2005 ஆம் ஆண்டு சிறப்பாக நடத்திட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் முறையாக தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கினார் பின்னர் ஜனவரி 2014-ல் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்த தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதி அளிக்கப்பட்டது. மேலும் 2014 முதல் 2016 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை நடத்துவதற்கு, ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 2 கோடி தமிழக அரசு வழங்கும் வகையில், புதிய நிதி ஆதரவாளர் குழுமம் ஏற்படுத்தப்பட்டது இதுதவிர, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை ரூ.4.50 கோடி செலவில் புனரமைக்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் அனைத்து புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இந்த டென்னிஸ் விளையாட்டு அரங்கம் உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்