முக்கிய செய்திகள்:
சிட்னி சென்றது இந்திய கிரிக்கெட் அணி.
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய அணி புதன்கிழமை சிட்னி சென்றடைந்தது அணியினருடன் தோனியும் சென்றிருந்தார் இருப்பினும் ஓய்வு குறித்து அவர் இன்னும் வெளிப்படையாக ஊடகங்களில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை, மெல்போர்ன் டெஸ்ட் டிரா ஆன போதிலும் இந்திய அணி தொடரை இழந்தது இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றார் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற்றது விமர்சனத்துக்கு வழி வகுத்தது முன்னாள் வீரர்களான செளரவ் கங்குலி, காவஸ்கர் உள்ளிட்டோர் தோனியின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர், ஓய்வு அறையில் நிலவும் அசௌகரியமான சூழலே, தோனி ஓய்வு முடிவு எடுக்கக் காரணம் என்ற செய்திகள் பரவுகின்றன ஆனால், ஓய்வு குறித்து தோனி இதுவரையிலும் வாய் திறக்கவில்லை டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒரு நாள் அணிக்கு தோனியே கேப்டன் எனவே, அவர் இந்திய அணியினருடன் சிட்னி சென்றார். சிட்னியில் தோனி பத்திரிகையாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
மேலும் செய்திகள்