முக்கிய செய்திகள்:
கிராமப்புற மாணவர்களும் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் சாதிக்க முடியும், விஸ்வநாதன் ஆனந்த்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான செஸ் போட்டியைத் தொடங்கிவைத்த அவர், பின்னர் செய்தியாளர்ளிடம் கூறியதாவது , தொடர் முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கிராமப்புற மாணவர்களும் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் சாதிக்க முடியும் என்று, ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது செஸ் விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது செஸ் விளையாட்டின் மூலம் மாணவர்களின் சிந்தனை திறன் வளரும். அந்த வகையில் செஸ் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட மாணவர்களின் கல்வித் திறனும் மதிப்பெண் பெறும் திறனும் அதிகரித்துள்ளது, தொடர் முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கிராமப்புற மாணவர்களும் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மேலும் செய்திகள்