முக்கிய செய்திகள்:
ஜேம்ஸ் பட்டின்சன் வீசிய பெளன்ஸர் ஹெல்மெட்டில் பட்டதில் ஷேன் வாட்சன் நிலைகுலைந்தார்.
மெல்போர்ன்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் வீசிய பெளன்ஸர் ஹெல்மெட்டில் பட்டதில், சக வீரர் ஷேன் வாட்சன் நிலைகுலைந்தார் உள்ளூர் போட்டியின்போது, பெளன்ஸர் ஹெல்மெட்டில் பட்டதில் நிலைகுலைந்த பிலிப் ஹியூஸ் அண்மையில் மரணமடைந்தார் அந்த சம்பவம் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்களின் நினைவிலிருந்து இன்னமும் அகலவில்லை, மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் தேதி டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வாறு செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டபோது, பட்டிசன் வீசிய பந்து வாட்சனின் ஹெல்மெட்டை பதம்பார்த்தது இதில் நிலைகுலைந்த வாட்சன் அப்படியே உட்கார்ந்துவிட்டார் சக ஆட்டக்காரர்கள் உடனே அவரை சூழ்ந்து கொண்டு கவலையுடன் நலம் விசாரித்தனர் அதன்பின்னர், அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை சிறிது நேரத்துக்குப் பின் களத்தைவிட்டு வெளியேறினார் பந்துவீசிய பட்டின்சனும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார் அதன் பின்னர் அவரும் களத்தை விட்டு வெளியேறினார்.
மேலும் செய்திகள்