முக்கிய செய்திகள்:
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கொல்கத்தா அணி சம்பியன்.
மும்பை: முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் கேரளத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது செளரவ் கங்குலி சக உரிமையாளராக உள்ள அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, "இஞ்சுரி டைம்' எனப்படும் கூடுதல் நேரத்தில் கொல்கத்தா அணியின் முகமது ரஃபிக், கார்னர் கிக்கை தலையில் முட்டி வெற்றிக்கான கோல் அடித்தார், ஐபிஎல் தொடரைப் பின்பற்றி முதல் முறையாக இந்தியாவில் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றன. ஆட்டங்கள் டபுள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த சென்னை, கேரளம், கொல்கத்தா, கோவா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் கொல்கத்தா, கேரள பிளாஸ்டர்ஸ் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின, மும்பையில் சனிக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெற்றது, கொல்கத்தா அணியில் காயம் காரணமாக ஃபிக்ரு பங்கேற்கவில்லை முதல் பாதியில் இரு அணிகளும் தற்காப்புடன் ஆடின இதனால் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் கேரள முன்கள வீரர்கள் இயான் ஹியூம், மைக்கேல் சோப்ரா இருவரும், கொல்கத்தா எல்லையில் ஊடுருவினர் ஆனால், அவர்களது கோல் முயற்சிக்கு கொல்கத்தா கோல் கீப்பர் எடெல் தடையாக இருந்தார் 58-ஆவது நிமிடத்தில் பந்தைத் தடுக்க முயன்றபோது, கேரள வீரர் ஜிங்கன் சேம் சைடு கோல் அடிக்க முயன்றார் அதிர்ஷ்டவசமாக கேரள கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ் அதைத் தடுத்து விட்டார் ஜிங்கன் சென்னைக்கு எதிரான அரையிறுதியில் சேம் சைடு கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது, 79-ஆவது நிமிடத்தில் கேரளத்தின் மைக்கேல் சோப்ரா அடித்த பந்தை, எடெல் அற்புதமாகத் தடுத்தார் அதேபோல, 83-ஆவது நிமிடத்தில் சோப்ராவுக்கு மற்றுமொரு முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால், இந்த முறையும் எடெல் பந்தைப் பறந்து தடுத்தார் அந்த பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது, 90 நிமிடங்கள் முடிந்து, இஞ்சுரி டைம் எனப்படும் கூடுதல் நேரத்துக்கு ஆட்டம் சென்றது இரு அணிகளும் கோல் அடிக்காததால் அநேகமாக, ஆட்டம் இன்னும் அரை மணி நேரம் நீட்டிக்கப்படலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர் ஆனால், 90+3 நிமிடத்தில் கொல்கத்தாவுக்கு கார்னர் கிக் கிடைத்தது அதை தலையால் முட்டி கோல் அடித்து கேரள வீரர்கள், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார் முகமது ரஃபிக். அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் கேரள வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால், கொல்கத்தா 1-0 என வெற்றி பெற்று, ஐஎஸ்எல் தொடரின் முதல் சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றது.
மேலும் செய்திகள்