முக்கிய செய்திகள்:
உலகக் கோப்பை கபடி: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் சாம்பியன்.
பாதல்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது, மகளிர் பிரிவில் இந்திய அணி நியூஸிலாந்தைத் தோற்கடித்து நான்காவது முறையாக சாம்பியன் ஆனது, பாதல் நகரில் இப்போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது இரு பிரிவிலும் கடந்த முறை மோதிய அணிகளே இந்த முறையும் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின கடும் போராட்டத்துக்குப் பின் இந்திய ஆடவர் அணி 45-42 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா சார்பில் சந்தீப் சிங் சுரக்புர், சந்தீப் லதார் ஆகியோர் முறையே 16, 10 புள்ளிகளைப் பெற்றனர், மகளிர் பிரிவில் இந்திய அணி 36-27 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது.
மேலும் செய்திகள்