முக்கிய செய்திகள்:
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் 7 சதவீதமாக பணவீக்கம் உயர்வு - ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்க திட்டம்

வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் கட்டுக்கடங்காத விலை உயர்வே, ஒட்டுமொத்த பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெங்காயத்தின் விலை, கடந்த ஓராண்டில் 278 சதவீதமும், தக்காளியின் விலையும் 122 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, அடுத்த மாதம் மத்தியில் அறிவிக்கவுள்ள புதிய பணக் கொள்கையில், வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே பணவீக்க உயர்வுக்கு காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மேலும் செய்திகள்