முக்கிய செய்திகள்:
தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்கக் கப்பல் ஊழியர்களிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை தொட

தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்கக் கப்பல் ஊழியர்களிடம் க்யூ பிரிவு போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஆயுதக் கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடி அருகே, இந்திய கடலோர காவல்படையினர் நடுக்கடலில் அதனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரணைக்காக அக்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து​, அந்த கப்பலில் இருந்த 35 ஊழியர்களும் ​கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, தமிழகக் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இவ்வழக்கு க்யூ பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டதன் அடிப்படையில், க்யூ பிரிவு போலீசார் தற்போது தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னையிலிருந்து சென்றுள்ள க்யூ பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. பவானீஸ்வரி தலைமையிலான குழுவினர், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலுக்குள் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்