முக்கிய செய்திகள்:
திருத்தப்பட்ட கட்டண விகிதங்களை பின்பற்றாத ஆட்டோ உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை - சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

திருத்தி அமைக்கப்பட்ட மீட்டர் கட்டண விதிமுறைகளை பின்பற்றாத ஆட்டோ உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

ஆட்டோ கட்டணங்களை திருத்தி அமைத்த தமிழக அரசு அதற்கான மீட்டரை ஆட்டோக்களில் பொருத்த கடந்த 15-ம் தேதிவரை கால அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில், விதிமுறைகளை பின்பற்றாத ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை சென்னை நகரில் மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த 36 குழுக்கள் இதில் ஈடுபட்டுள்ளன. இதுவரை ஆயிரத்து 96 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், திருத்தி அமைக்கப்பட்ட ஆட்டோ கட்டண விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. இதனிடையே, புதிய ஆட்டோ கட்டணம் குறித்த பேரணி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள், போக்குவரத்து அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்