முக்கிய செய்திகள்:
திருச்சி அருகே பெட்ரோலிய பொருள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - 4 ஆயிரம் லிட்டர்டீசல் சாலையில் கொட்டியது

திருச்சி அருகே பெட்ரோலிய பொருள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 4 ஆயிரம் லிட்டர்​டீசல் சாலையில் கொட்டியது. இதன் காரணமாக, 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சியை அடுத்த வாழவந்தான் கோட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து டீசல் நிரப்பிய லாரி தஞ்சையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, Gas சிலிண்டர் ஏற்றிவந்த மற்றொரு லாரி பின்புறமாக மோதியது. இதனால், லாரியில் இருந்த 4 ஆயிரம் லிட்டர் டீசல், சாலையில் கொட்டி வீணானது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, தீ விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர். இதில் காயமடைந்த லாரி ஓட்டுநரும், உதவியாளரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதன் காரணமாக திருச்சி-தஞ்சை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்