முக்கிய செய்திகள்:
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே லாரும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த பரிதாபம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே லாரும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரை அருகேவுள்ள முறியோடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவர், தனது குடும்பத்தினருடன் இரண்டு கார்களில் இன்று வேளாங்கண்ணி சென்று கொண்டிருந்தார். பழனி அடுத்த அனுப்பப்பட்டி என்ற இடத்தில் அவர்களது கார், முன்னால் சென்று​ கொண்டிருந்த லாரியை முந்த முயன்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், மதுரையில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைநத் ஜினி என்பவர், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்