முக்கிய செய்திகள்:
கூடங்குளம் அருகே சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது அவை வெடித்துச் சிதறியதில் பெண்கள் உட்பட 6 பேர் பலி

கூடங்குளம் அருகே சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது, அவை வெடித்துச் சிதறியதில், பெண்கள் உட்பட 6 பேர் பலியாகினர். இதுதொடர்பாக உதயகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரையை ஒட்டியுள்ள சுனாமி காலனியில், ஒரு வீட்டில் நேற்று சிலர் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், அந்த வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. பத்மகுமார் தலைமையில் 5 தீயணைப்பு வாகனங்கள், சம்பவ நடந்த வீட்டிற்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்தன. பின்னர் வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி அவற்றை செயலிழக்கச் செய்தனர். இந்நிலையில், சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து பதுக்கி வைத்தது, சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட பலர் மீது கூடங்குளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயேந்திர பிதரி, இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்