முக்கிய செய்திகள்:
காஞ்சிபுரம்: படப்பை அருகே கடத்தி செல்லப்பட்ட கடை உரிமையாளர் போலீசாரின் தீவிர நடவடிக்கையால் மீட்பு - 6 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கடத்தி செல்லப்பட்ட கடை உரிமையாளர் ஒருவர், போலீசாரின் தீவிர நடவடிக்கையால் மீட்கப்பட்டார். கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பையை அடுத்த ஓரத்தூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் ஹார்டுவார் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற போது, அவ்வழியே காரில் வந்த மர்ம நபர்கள் ஆனந்தனை கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசாரின் ஆலோசனையின்படி கடத்தல்காரர்களுடன் பேசி 5 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, அவர்களை படப்பை அருகே வரவழைத்தனர். கடத்தல்காரர்கள் அங்கு வந்த போது, மறைந்திருந்த தனிப்படை போலீசார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்