முக்கிய செய்திகள்:
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி,​ திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். இதனை அடியொற்றி, திருச்சியில் நீதிமன்ற வளாகத்தின் முன்பு 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அராஜக செயல்களைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்