முக்கிய செய்திகள்:
18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர கைக்கடிகாரம் திருட்டு, கடை ஊழியர் கைது.
சென்னை: சென்னையில் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள வைர கைக்கடிகாரத்தை திருடியதாக கடை மேலாளர் கைது செய்யப்பட்டார், இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் செயல்பட்டு வரும் ரோலக்ஸ் கைக்கடிகார நிறுவன கடையில் சில நாள்களுக்கு முன்பு வைர கற்கள் பதித்த ரூ. 18 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் திருடுபோனது இது குறித்து அந்தக் கடை ஊழியர்கள், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர் விசாரணையில் அந்தக் கடையின் மேலாளராகப் பணிபுரிந்த முஸ்தாக் அகமதுதான், அந்த கைக்கடிகாரத்தை திருடியிருப்பது தெரியவந்தது, இதையடுத்து போலீஸார் முஸ்தாக் அகமதுவை புதன்கிழமை கைது செய்தனர் அவரிடமிருந்து திருடுபோன கைக்கடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்