முக்கிய செய்திகள்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கம்,வைரம் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மே 1-ம் தேதி சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புக்குப் பின்னர், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், வசுந்தராஜ் என்பவர் கொண்டு வந்த பையில், மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்கம், 405 கிராம் வைரம், 300 கிராம் பிளாட்டினம் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையின் போது, தாம் ஒரு நகை விற்பனையாளர் என்றும், தங்கம், வைரம் ஆகியவற்றை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார். எனினும், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், தங்கம் மற்றும் வைரத்தை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர், அதனை வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை வசம் ஒப்படைத்தனர்.
இதேபோல் ரயில்வே நடைமேடையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை சோதனை செய்த போலீசார், அவரிடம் இருந்து 25 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.

 

மேலும் செய்திகள்