முக்கிய செய்திகள்:
கோடம்பாக்கம் பாலம் பராமரிப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் விரியும் தன்மையுடைய இணைப்பு மற்றும் உறுதியான மேல் தல பூச்சு அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் 10.5.2014 முதல் இரண்டு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும்.

* கோடம்பாக்கம் மேம் பாலத்தில் இலகுரக வாகனங்கள் மட்டும் ஒரு வழி பாதையில் லிபர்டி சந்திப்பில் இருந்து வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.

* மாநகர பஸ்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (தண்ணீர், பால்) ஏற்றி செல்லும் கனகரக வாகனங்கள் தற்போது உள்ள நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தற்போது உள்ள வழி தடத்திலேயே செல்லலாம்.

* வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்ல விழையும் மாநகர பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்கள் இடது புறமாக திருப்பி திருமலைப்பிள்ளை சாலையில் சென்று பசுல்லா சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி நேராக ரங்கராஜபுரம் மேம்பாலத்தை கடந்து சக்கரபாணி தெரு, ஐந்து விளக்கு சந்திப்பில் வலது புறம் திருப்பி விஸ்வ நாதபுரம் மெயின் சாலை வழியாக மீண்டும் லிபர்டி சந்திப்பை அடைந்து பழைய வழித்தடத்திலேயே செல்லலாம்.

* ரெங்கராஜபுரம் மேம்பாலத்தில் ஸ்டேசன் வியூ சாலையிலிருந்தும் பசுல்லா சாலை– வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பிலிருந்தும் இரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்ல வேண்டும்.

* மகாலிங்கபுரம் மேம்பாலத்தில் இருந்து தி.நகர் செல்ல விழையும் வாகனங்கள் அனைத்தும் ஹபிபுல்லா சாலையில் இடதுபுறம் திரும்பி அருளாம்பாள் சாலை வழியாக பசுல்லா சாலை சென்று ராகவையா சாலை வழியாக ரோகிணி சந்திப்பை அடைந்து தி.நகர் செல்லலாம்.

* மகாலிங்கபுரம் மேம்பாலத்தில் இருந்து வடபழனி நோக்கி செல்ல விழையும் வாகனங்கள் அனைத்தும் ஹபிபுல்லா சாலையில் இடதுபுறம் திரும்பி அருளாம்பாள் சாலை வழியாக பசுல்லா சாலை சென்று ரங்கராஜபுரம் மேம்பாலத்தை கடந்து வலதுபுறம் திரும்பி சக்கரபாணி தெரு, ஐந்து விளக்கு சந்திப்பு விஸ்வநாதபுரம் மெயின் ரோடு வழியாக ஆற்காடு சாலையை அடைந்து அவர்கள் செல்லும் இலக்கை அடையலாம்.

* மேட்லி சந்திப்பில் இருந்து வள்ளுவர் கோட்டம் மற்றும் மகாலிங்கபுரம் மேம்பாலம் நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் உஸ்மான் மேம்பாலம் வழியாக உஸ்மான் சாலை – பசுல்லா சாலை சந்திப்பை கடந்து வடக்கு உஸ்மான் சாலை வழியாக தாங்கள் செல்லும் இலக்கை அடையலாம்.

* மேட்லி சந்திப்பில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் உஸ்மான் மேம்பாலம் வழியாக வடக்கு உஸ்மான் சாலை மற்றும் பசுல்லா சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி ரங்கராஜபுரம் மேம்பாலத்தை கடந்து சக்கரபாணி தெரு, ஐந்து விளக்கு சந்திப்பு, விஸ்வ நாதபுரம் மெயின் ரோடு வழியாக லிபர்ட்டி சந்திப்பை அடைந்து தாங்கள் செல்லும் இலக்கை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்