முக்கிய செய்திகள்:
சாலை விபத்தில் பெண் பலி

சென்னை எர்ணாவூர் மேம்பாலத்தில் மல்லிகா வயது 42 என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் செல்லும் போது கண்டைனர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் : பல காலமாகவே இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலையை கடந்து செல்பவர்கள் பலமுறை விபத்திற்கு உள்ளாகுகின்றனர். போதிய மின் விளக்குகளை அரசு இப்பகுதிகளில் நிறுவவேண்டும் என்றனர்.

விபத்திற்கு உள்ளான பெண் சுனாமி குடியிருப்பில் வகித்து வந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல் துறையினர் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகள்