முக்கிய செய்திகள்:
கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், திருவள்ளூர் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட்டனர். மயிலாடுதுறையில் ஹைதர் அலி போட்டியிட்டார். இந்த தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் முடிந்ததும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திருவள்ளூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

மேலும் செய்திகள்