முக்கிய செய்திகள்:
சென்னை கடலில் நீந்து வந்த புள்ளி மான்

சென்னை திருவெற்றியூர் பகுதியில் உள்ள பெரியகுப்பம் கடல் பகுதியில் புள்ளி மான் ஓன்று கடலில் நீந்து கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். காலில் பலத்த அடிபட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த புள்ளிமானை அப்பகுதி மக்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்

காடுகளில் வாழும் மான் கடலில் நீந்து கொண்டிருந்தது அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமுக விரோதிகள் கடலில் மான்களை கடத்தி இருக்கலாம் அதில் ஓன்று அடிபட்ட நிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்து கரை ஓதுங்கி இருப்பதாக அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டது.

கடலில் மான் நீந்தி வந்தது பற்றி காவல் துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அப்பகுதி மக்கள் இதுவரைக்கும் எவரும் வரவில்லை என்பதை வேதனையோடு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்