முக்கிய செய்திகள்:
மீண்டும் கமிஷனராக திரிபாதி நியமனம் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு, புதிய போலீஸ் கமிஷனராக திரிபாதியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதி, சென்னை மாநகரின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2011 மே முதல் 2012 செப்டம்பர் வரை சென்னை மாநகரக கமிஷனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை போலீஸ் கமிஷனராக இதுவரை இருந்த ஜார்ஜ், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்