முக்கிய செய்திகள்:
ராயபுரம் ரயில்வே சரக்கு யார்டில் தீ விபத்து

சென்னை ராயபுரம் ரயில்வே சரக்குயார்டில் இருந்த 1000க்கும் வேற்பட்ட ரயில்வே கட்டைகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து ரயில்மூலம் கொண்டு வரப்படும் உணவு தான்ய வகைகளை   இறக்குமதி செய்து லாரிகள் மூலம் அனுப்பபடும் ராயபுரம் ரயில்வே சரக்கு யார்டில் ரயில் தண்ட வாளங்களுக்கு உபயோகபடுத்தப்படும் பழைய மரக்கட்டைகள் 1000 கணக்கில் குவிக்கபட்டு இருந்தன இந்த மரக்கட்டைகள் மீது அடையாளம் தெரியாத மர்ம  நபர்கள் தீ வைத்து சென்றதால் அனைத்து மரக்கட்டைகளும் தீயில் எரிந்து கரும்புகை சூழந்ததை அடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துனறயினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ராயபுரம் மற்றும் தண்டயார் பேட்டை பகுதிகளில் இருந்து இரண்டு வண்டிகளில் விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும்  பணியில் ஈடுபட்டனர்  சுமார்  2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுபடுத்தினர் இருந்த போதிலும் காய்ந்து இருந்த கட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின  இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகள்