முக்கிய செய்திகள்:
தேமுதிக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் சௌந்தரபாண்டியன் அறிமுகப்படுத்தி செயல் வீரர்கள் கூட்டம் திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பாஜக, மதிமுக, பாமக மற்றும் ஐ,ஜே.கே உள்ளிட்ட தோழமை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் இக் கூட்டம் நடைபெற்றது.

வட சென்னை வேட்பாளர் சௌந்தர பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது;

நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தேர்தெடுத்தால் மெட்ரோ ரயில் திருவொற்றியூரில் இருந்து தொடங்குவதற்கு உறுதியளிப்பேன், வட சென்னை மக்களுக்கு நன்கு அறிமுகமான என்னை கண்டிப்பாக வெற்றிபெற செய்வார்கள் என கூறினார்

 

மேலும் செய்திகள்