முக்கிய செய்திகள்:
ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே நடக்கின்ற தேர்தல் மத்திய சென்னை தேர்தல் அமைச்சர் பா. வளர்மதி பேச்சு

மத்திய சென்னைக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை அமைச்சர் பா.வளர்மதி திறந்து வைத்து உரையாற்றுகையில் ;

தமிழக முதல்வரின் நல்லாசிப் பெற்ற மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் ஓரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர் ஆனால் எதிரணியில் நிற்க வைக்க பட்டுள்ளவர் உலக கோடிஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் மத்திய சென்னை தேர்தல் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்  இங்குள்ள செயல் வீரர்கள் வாக்கு சேகரிக்க  செல்லும் போது மக்களிடையே ஓரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டும்.

நமது வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்கள் தங்களது குறைகளை எப்போழுது வேண்டும் நாளும் நேரில் சந்தித்து தெரிவிக்க முடியும். ஆனால் எதிர் அணியில் உள்ள வேட்பாளரை சந்திக்க வேண்டும் என்றால் சென்னை ஏர் போர்ட்டில் உள்ள ஸ்பைக் ஜெட் அலுவலகத்தில் தான் சென்று சந்திக்க முடியும்.  40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று தமிழக முதல்வரை பாரத பிரதமராக அரியணையில் அமர வைக்க அயராது பாடுபட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்,  கழக அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, எம்.எல்.ஏ., அமைச்சர் அப்துல் ரஹீம், நா.பாலகங்கா, எம்,பி., மேயர் சைதை துரைசாமி, வி.பி.கலைராஜன், எம்,எல்,ஏ., பகுதி கழக செயலாளர் நுங்கை மாறன்,  எம்.சி., தொகுதி கழக செயலாளர் டி.சிவராஜ், எம்,சி., புஷ்பா நகர் ஆறுமுகம், எம்,சி., யு.கற்பகம், எம்,சி,., எஸ்.சக்தி, எம்,சி., பி.சின்னையன், எம்,சி., சாந்தி பாஸ்கர், எம்,சி., வி,ஏ, மகேஷ்.,நுங்கை விவேக், மைலம் கண்ணன், முத்துபாண்டி, ஜெ.பார்த்தசாரதி, கே,ஆர், கிருபாகரன், சாலை உமாபதி, நுங்கை மூர்த்தி, சாலை முத்து, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்