முக்கிய செய்திகள்:
மடிப்பாக்கத்தில் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் வாக்கு சேகரிப்பு

அதிமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மற்றும் உள்ளகரம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.

தமிழக அரசின் சாதனைகள் மற்றும் தமிழக முதல்வர் பாரத பிரதமரானால் நாட்டிற்கு ஏற்படும் பல நன்மைகளை பற்றி பொதுமக்களிடையே வேட்பாளர் விளக்கி கூறினார்.

பிரசாரத்தில் அமைச்சர்கள் பா.வளர்மதி, டி.கே.எம். சின்னையா, மாவட்ட கழக செயலாளர்கள் வி.பி. கலைராஜன், விருகை ரவி, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் எம்.பி., சரஸ்வதி ரங்கசாமி,  கே.பி.கந்தன், எம்,எல்,ஏ. ஜெ.ஜெ. மணிகண்டன் எம்,சி., மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகள்