முக்கிய செய்திகள்:
வட சென்னையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

வட சென்னையில் ராயபுரம் பகுதியில் திமுக செயல் வீரர்களில் கூட்டம் மாவட்ட செயாலாளர் ஆர்.டி.சேகர் தலைமையில் நடைபெற்றது

இக் கூட்டத்தில் பேசிய ஆர்.டி.சேகர் தமிழகத்தில் மோடி அலை எதுவும்  வீசுவதாக தெரியவில்லை, தமிழக முதல்வர் செய்யாததை எல்லாம் சொல்லிக்கொண்டு பிரசாரம் செய்துகொண்டு இருக்கிறார். மக்கள் விரோத செயலையே தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல நல்ல திட்டங்கள் தற்போது செயல்பட்டு வரும் அதிமுக அரசால் தடுத்து நிறுத்தபடுகிறது.

புதிய தலைமை செயலகத்தை செயல்படாமல் தடுத்தது மற்றும் அண்ணா நுற்றாண்டு நூலகத்திற்கு மூடு விழா நடத்த தீவிரம் காட்டுவது என மக்கள் விரோத செயலை தமிழக அரசு செய்து வருவதை பற்றி மக்களுக்கு நாம் எடுத்துரைக்கவேண்டும் என்றார். இதில் வட சென்னை வேட்பாளர் கிரிராஜன் பகுதி கழக செயலாளர் பழனி, கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வட்ட கழக நிர்வாகிகளும் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகள்