முக்கிய செய்திகள்:
ராஜீவ் காந்தி சிலை உடைப்பு காங்கிரசார் மறியல்

பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் 2 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இன்று காலை காங்கிரசார் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் அந்த இடம் அருகே திரண்டனர்.சிலையை உடைந்தவர்களை கைது செய்யக்கோரி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் சீமானை கைது செய்கக் கோரி கோஷமிட்டு சாலையில் அமர்ந்தனர்.இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சக்திவேல், ஜோதி, ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, சுரேஷ் பாபு, சூளை ராஜேந்தர், கொண்டல் தாசன், மணிபால், அகரம் கோபி, மகளிர் அணி அபி உள்பட 500–க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

 

மேலும் செய்திகள்