முக்கிய செய்திகள்:
கே.சி. ராஜா தலைமையில் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

சென்னை திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் கே.சி.ராஜா தலைமையில் கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் மற்றும் தமிழர் பாதுகாப்பு பேரவை தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டனர்

செயற்குழுவில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடை ஓரு போதும்
அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும்,வருகின்ற மே 5 ம் தேதி வணிகர் தினத்தை திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ராயபேட்டை ஓய்.எம்.சி.எ மைதானத்தில் நடத்துவது என ஓருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய தலைவர் கே.சி.ராஜா , நமது சங்கத்தின் கொள்கையே எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் சங்க உறுப்பினர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் என்னிடம் வந்து நேரடியாக சொல்லுங்கள் நமது சங்கத்தின் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ள சென்னை தளபதி கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நமது குடும்ப நண்பர் நமது சங்கம்தான் நமக்கு குடும்பம் சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் தான். ஆண்டு விழாவை நாம கொண்டாடியது பற்றி எல்லோரும் பேசுறாங்க அது என்னோட சாதனை இல்லை இங்கு உள்ள அனைவரின் உழைப்பும் சேர்ந்ததால்தான் குறுகிய காலத்திலேயே மிக அருமையான முறையில் ஆண்டுவிழாவை கொண்டாட முடிந்தது. சிலகாலமாகவே சிலரால் தொடர்ந்து தொல்லைகள் நமக்கு வந்த வண்ணம் உள்ளது.அதைப்பற்றி எல்லாம் கவலை படுபவன் நான் இல்லை.யாராக இருந்தாலும் நம் முன்னே வந்து
நேரடியாக மோத வேண்டுமே தவீர நமது முதுகின் பின்பு குத்த நினைகிறார்கள் அவர்களுக்கு நம்முடைய பலம் என்ன என்று தெரியவில்லை நம்முடைய பலத்தை நாம் காட்டினால் அவர்களது நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிடும் என்றார்.இதில் ஐய்யனார், ஜி.பாலமுருகன், ஆர்.சின்னப்பன், எஸ்.ஆர்.எம்.கார்த்திக் குரு.வே.தஷிணாமூர்த்தி, தியாகராஜன், கிருஷ்ணசாமி, ஆனந்தன், செல்வராஜ், முருகானந்தம், முருகன், நாசர், ஸ்ரீகிருஷ்ணன், சொக்கநாதன், மணிகண்டன், குணா,ராஜ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகள்