முக்கிய செய்திகள்:
சென்னையில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.சென்னையில் 92 இன்ஸ்பெக்டர்கள் நேற்று மாலை அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அனைவருக்கும் சென்னை மாநகருக்குள் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை சட்டம்– ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சேட்டு வளசரவாக்கத்துக்கும், தாம்பரம் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் அம்பத்தூர் தொழிற்பேடடைக்கும், நுங்கம்பாக்கம் இன்ஸ் பெக்டர் செல்லப்பா தாம்பரத்துக்கும், ஏழுகிணறு இன்ஸ்பெக்டர் சுந்தரம் மாதவரம் பால் பண்ணைக்கும் மாங்காடு இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் ஏழுகிணறுக்கும், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சம்பத் செங்குன்றத்துக்கும் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் சத்தியன் பெரியமேட்டுக்கும், ஆவடி சிவக்குமார் கோயம்பேட்டுக்கும், அம்பத்தூர் தொழிற் பேட்டை சரவணன் அண்ணா சாலைக்கும், திருவொற்றியூர் கோபிநாத் நுங்கம் பாக்கத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

 

மேலும் செய்திகள்