முக்கிய செய்திகள்:
தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்:மு.க.ஸ்டாலின் பேட்டி

பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்தார். மணவிழாவில் அவர் பேசியதாவது:தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தவர் கலைஞர். தாய்மார்கள் எந்த பொருளை வாங்கினாலும் பேரம் பேசிதான் வாங்குவார்கள். அதேபோல் நம்மைப்பற்றி சிந்திக்க கூடியவர்கள் யார் என்று சிந்தித்து வாக்களியுங்கள்.

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே தி.மு.க.வுடன் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் கூட்ட ணியை உருவாக்கி தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.சுயமரியாதையுடன் நடைபெறும் திருமணம் தமிழ் திருமணம்தான். மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற வாழ்த்துகிறேன்.

 

மேலும் செய்திகள்