முக்கிய செய்திகள்:
பல்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நியமனம்

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. அதனை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார்.சர்வதேச தரத்திற்கு இணையாக சிறப்பு துறைகளுடன் செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. உள் கட்டுமானப்பணிகளை மாற்றி அமைக்கும் பணி ஒரு சில நாட்களில் முடிந்து விடும்.

பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் தற்போது பொறுத்தப்படுகின்றன. மனித உடல் உறுப்புகளை துல்லியமாக படம் பிடிக்க கூடிய சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிய மருத்துவமனை அடுத்த மாதம் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. முதல்–அமைச்சரிடம் இதற்கான தேதி கேட்டு இறுதி செய்யப்படுகிறது.இதற்கிடையில் பல்நோக்கு மருத்துவமனைக்கு புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவ தேர்வு வாரியம் டாக்டர்களை கலந்தாய்வு மூலம் தேர்வு செய்துள்ளது. 131 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சீனியர் மற்றும் ஜூனியர் ஆலோசகர்கள், டாக்டர்கள், 4 பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

 

மேலும் செய்திகள்