முக்கிய செய்திகள்:
சென்னை சத்திய மூர்த்திபவனில் பா.ஜனதா போராட்டம்

காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யர் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை டீ விற்க செல்லலாம் அதற்குத்தான் அவர் லாயக்கானவர். அதை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.மணிசங்கர் அய்யரின் இந்த விமர்சனத்துக்கு பாரதீய ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மணிசங்கர் அய்யருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு 100–க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா தொண்டர்கள் இன்று திரண்டு வந்தனர்.

பாரதீய ஜனதா போராட்டம் நடத்தலாம்என்று கருதியதால் முன்கூட்டியே ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் சத்திய மூர்த்தி பவன் வாசலில் அரணாக நின்று யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு அளித்தனர். மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில் ஒரு தள்ளு வண்டியில் டீ கேன்கள் மற்றும் சமோசா கொண்டு வந்தனர். அதை சத்தியமூர்த்தி பவன் முன்பு ரோட்டில் வைத்து விற்றனர். அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக டீ, சமோசாக்களை வழங்கினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணிசங்கர் அய்யரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதையொட்டி 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

மேலும் செய்திகள்