முக்கிய செய்திகள்:
சென்னை வந்தடைந்தது கிருஷ்ணா தண்ணீர்

கிருஷ்ணா கால்வாயில் உப்பலமடுகு பகுதியில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தால் ரூ.6 கோடி செலவில் கால்வாய் சீரமைப்பு பணிகள் கடந்த 4 மாதமாக நடந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை.இந்த நிலையில் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்போது முழுமையாக முடிந்ததால் கடந்த 10–ந் தேதி மீண்டும் கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ‘ஜூரோ’ பாயிண்டை வந்தடைந்தது.

அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பூண்டி ஏரிக்கு இன்று காலையில் கிருஷ்ணா தண்ணீர் வந்தது.கண்டலேறு அணையில் 2500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டாலும் பூண்டி ஏரிக்கு 13 கன அடி தண்ணீர் தான் வந்தது.இது படிப்படியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்