முக்கிய செய்திகள்:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 1–ந் தேதி தொடங்கியது. 10–ந் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடந்தது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் (பரமபதவாசல்) திறக்கப்பட்டது. அதன் வழியாக பெருமாள் பிரவேசித்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார்.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசன்ம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக திருவல்லிக்கேணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மெகா திரை அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியை யொட்டி திருவல்லிக் கேணியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவிலில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்ப பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 10 மணி வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

 

மேலும் செய்திகள்