முக்கிய செய்திகள்:
சென்னையில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

1.1.2014 அன்று தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் ஆய்வு செய்து துணைப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டது. அது இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 18 லட்சத்து 13 ஆயிரத்து 76 பேர். பெண்கள் 18 லட்சத்து 22 ஆயிரத்து 461 பேர். இதரபிரிவினர் 662 பேர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேளச்சேரி அதிக வாக்காளர்கள் கொண்டதாக உள்ளது. இங்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 596 வாக்காளர்கள் உள்ளனர்.குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதி துறைமுகம் ஆகும். இங்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 645 வாக்காளர்கள் உள்ளனர்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆகும். இதுவரை புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படாத 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும்.

18 மற்றும் 19 வயது பூர்த்தி அடைந்த இறுதி திருத்தப்பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் தேசிய வாக்காளர் தினமான வருகிற 25–ந் தேதி அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் வழங்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பம் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஆகும். இதில் ஆண்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 232. பெண்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 403. இதரபிரிவினர் 142.

பெறப்பட்ட இந்த மனுக்கள் கள ஆய்வு செய்யப்பட்டத்தில் 17 ஆயிரத்து 576 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2 லட்சத்து 32 ஆயிரத்து 199 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

 

மேலும் செய்திகள்