முக்கிய செய்திகள்:
சென்னையில் பிரமாண்ட கூட்டம்:மோடி பேசுகிறார்

விவேகானந்தரின் 151–வது பிறந்த நாளான ஜனவரி 12–ந் தேதி கோவா மாநில தலைநகர் பானாஜியில் நரேந்திர மோடி பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் ஒரு கட்டமாக அடுத்த மாதம் 8–ந் தேதி மோடி சென்னை வருகிறார்.

அவர் பேசுவதற்காக வண்டலூர் வி.ஜி.பி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் 10 லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டுள்ளோம். 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நிச்சயமாக கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கூட்டணிக்கான பேச்சு வார்த்தை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும். உடனடியாக கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும். நரேந்திரமோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள்.

இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது இந்த தேர்தலில் காங்கிரசை தண்டிப்பதுதான். அந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட இல்லை என்ற நிலையை மக்கள் வழங்குவார்கள். இதை செய்ய தவறினால் இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதிலும் தமிழர்கள் மீது மேலும் பெரிய தாக்குதல் நடைபெறும்.

விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தமிழர்கள் மீது அன்பு கொண்டவர்கள். உலகில் எங்கு தமிழர்கள் தாக்கப்பட்டாலும் உடனடியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். மத்தியில் வலுவான ஆட்சி உருவாக வேண்டும். மோடி பிரதமர் ஆக வேண்டும். அப்படியானால்தான் தமிழர்கள் நலன் காக்கப்படும்.எனவே தே.மு.தி.க.வும், பா.ஜனதா கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்