முக்கிய செய்திகள்:
மோசடி மற்றும் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய, கோவை வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி கைது - 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

மோசடி மற்றும் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய, கோவை வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜவேல், நிதி நிறுவனம் நடத்தி மோசடி வழக்கில் சிக்கிய தனது மனைவி மோகனாவை காப்பாற்றுவதற்காக, அமாவாசை என்ற பெண்ணை கொலை செய்து, அவரது உடலை தனது மனைவியின் உடல் எனக்கூறி, இறுதிச் சடங்குகள் நடத்தி நாடகமாடிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவரை கொலை செய்து, அவரது சொத்தை, தனது மனைவி பெயரில் மாற்றியுள்ளார். இந்த கொலை வழக்குகள் தொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில், தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் ராஜவேல், மனைவி மோகனாவுடன், கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வருகிற 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி திரு. விஜயகார்த்திக் உத்தரவிட்டதையடுத்து, கோவை மத்திய சிறையில் ராஜவேலும், மோகனாவும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்